அபூர்வ சகோதரர்கள் குட்டி கமல் "அப்பு" எப்படி குட்டையானார்..? வெளிவந்த உண்மை ரகசியம்...! - Cinemapettai
Connect with us

Cinemapettai

அபூர்வ சகோதரர்கள் குட்டி கமல் “அப்பு” எப்படி குட்டையானார்..? வெளிவந்த உண்மை ரகசியம்…!

News | செய்திகள்

அபூர்வ சகோதரர்கள் குட்டி கமல் “அப்பு” எப்படி குட்டையானார்..? வெளிவந்த உண்மை ரகசியம்…!

சேதுபதி, அப்பாதுரை (அப்பு), ராஜா என மூன்று கதாபாத்திரங்களில் கமல் நடித்து 1989ல் வெளியான படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. படத்தின் கதை.. நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், ஜெய்ஷங்கர் ஆகியோரால் அப்பா கமல்கொல்லப்படுகிறார்.

இதை அறிந்து கொள்ளும் அப்பு கமல், தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க ஆரம்பிக்கிறார். அந்தக் கொலைகளில் எல்லாம் மெக்கானிக் கமல் மாட்டிக் கொள்கிறார்.

Apoorva

இறுதியில் நாகேஷையும் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவார் அப்பு கமல். படத்தில் குட்டி கமல்ஹாசனாக அவர் எப்படி நடித்தார் என்ற விஷயத்தை மட்டும் இப்போது வரைக்கும் படக்குழு கூறியதே இல்லை.

காலப்போக்கில் அனைவரும் அந்த விஷயத்தை கேட்பதையும் விட்டுவிட்டனர். இந்த நிலையில் குட்டி அப்புவாக கமல் நடித்தது எப்படி என்று ஒரு தகவல் வந்துள்ளது.

kamal-haasan

அதாவது முட்டியில் வைக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் ஷு வடிவமைக்கப்பட்டதாம். அதோடு கால்களை மடக்கவும் ஸ்பெஷல் பெல்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதேசமயம் இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், குட்டி அப்பு பற்றி ஒரு சின்ன விஷயம் கூறியிருந்தார். அதாவது குட்டி அப்பு வரும் காட்சிகள் மட்டும் மிகவும் கலர்புல்லாக இருக்கும் என்று கூறியிருந்தார்.கலர் அதிகமாக இருந்தால் அதில் இருக்கும் மற்ற விஷயங்களை மக்கள் அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள் என்பது ஒரு கணிப்பு.

kamal-haasan

அபூர்வ சகோதரர்கள், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனை சரித்திரங்கள் இதோ உங்களுக்காக….

அதிக பார்வையாளர்கள் பார்த்த படம் என்று சிவாஜி நடித்த திரிசூலம் செய்த சாதனையை முறியடித்தது.எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை சென்னை தேவிபாரடைஸில் 197 நாட்கள் ஓடி முறியடித்தது.

தமிழ், தெலுங்கு(டப்பிங்), ஹிந்தி(டப்பிங்) என்று மூன்று மொழிகளிலும் வெள்ளி விழாவை தாண்டி ஓடிய முதல் தமிழ் படம்.

kamal

சென்னையில் மட்டும் முதல் 78 நாட்களில் தொடர்ந்து 1000+ ஹவுஸ்புல் காட்சிகள் சாதனை படைத்த ஒரே படம்.

சென்னை காசி தியேட்டரில் 197 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்
சென்னை அபிராமி தியேட்டரில் 148 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்
பெங்களூரில் 5 தியேட்டர்களில் (பல்லவி, நட்ராஜ், கல்பனா, லட்சுமி, சாந்தி) 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்.

சகலகலாவல்லவனுக்கு பின் 4 மாநகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூரு) வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் படம்.கேரளாவில் 100 நாட்களையும், கர்நாடகாவில் 200 நாட்களையும் கொண்டாடிய முதல் தமிழ் படம்.10 தியேட்டர்களில் 20 வாரங்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் ரெகுலர் காட்சிகளில் ஓடிய ஒரே தமிழ் படம்.

சென்னை-தேவி பாரடைஸ்,சென்னை-அபிராமி,சென்னை-அகஸ்தியா
சென்னை-காசி,பெங்களூரு-பல்லவி,மதுரை-அபிராமி,கோவை-அர்ச்சனா,திருச்சி-மாரீஸ் ராக்,சேலம்-கைலாஷ்,நாகர்கோவில்-மினி சக்கரவர்த்தி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top