Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷின் அசுரன் பார்த்த விருமாண்டி கமலின் ரியாக்ஷன் இது தானாம்
பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் தான் அசுரன். தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் பிரம்மாண்ட அசுரனாகவே ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது படம். சாமானியன் ரசிகன் என்பதனை தவிர்த்து, கோலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தினை கமலஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காமித்துள்ளனர். அவரும் படத்தை ரசித்து பார்த்தாராம். உடனே லண்டனில் இருக்கும் தனுஷை தொடர்பு கொண்டு நடிப்பினை பாராட்டியுள்ளார், இதே போல நடிப்பில் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். வெற்றிமாறனையும் கைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியர் நேரில் வாழ்த்து பெற்றார்.

Manju Kamal shruthi
அன்றையை விருமாண்டிக்கு இன்றையை அசுரன் கட்டாயம் பிடிக்க தானே செய்யும்.
