செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கொரோனா குமார், எஸ்டிஆர் 48 படங்கள் கோவிந்தா போட்டதன் பின்னணி.. கமலும், சிம்புவும் போட்ட தப்பு கணக்கு

சிம்பு படங்கள் எப்பொழுதுமே ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்படும் அதன்பின் டேக் ஆஃப் ஆகாமல் போய்விடும். இப்படி கொரோனா குமார் மற்றும் எஸ்டிஆர் 48 இந்த இரண்டு படங்களும் அந்த லிஸ்டில் தான் சேர்ந்துள்ளது. இதற்கு முன்னரும் சிம்புவிற்கு பல படங்கள் தடபுடலாக ஆரம்பித்து அதன் பின் ட்ராப்பானது.

கொரானா குமார் படம் இயக்குனர் கோகுல் மற்றும் ஐசரி கணேஷ் கூட்டணியில் சிம்பு நடிப்பதாக 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ப்ராஜெக்ட் கொரோனா காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு அப்படியே அமுங்கிப்போனது. அந்த நேரத்தில் சிம்புவிற்கு படங்கள் ஓடாமல் பீல்ட் அவுட்டில் இருந்தார்.

அதே ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் இணைந்து சிம்பு நடித்த படம் மாநாடு. இந்த படம் அவருக்கு ஒரு கேரியர் பிரேக் படமாக அமைந்தது. பிளாக்பஸ்டர் கிட்டடித்து சிம்பு மார்க்கெட்டே வேற லெவலில் சென்றது. சுதாரித்துக் கொண்ட சிம்பு தனது சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டார்.

சிம்பு சம்பளத்தை உயர்த்துவதற்கு முன் பேசப்பட்ட படம் கொரோனா குமார். ஆனால் அந்த படத்திற்கும் சிம்பு அதிக சம்பளம் கேட்டதால் கொரோனா குமார் படம் ப்ராப்பானது. இதே போல தான் சிம்பு நடிப்பதாக இருந்த மற்றொரு படமும் ட்ராப்பானது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க, தேசிங்கு பெரியசாமி எஸ் டி ஆர் 48 படத்தை இயக்குவதாக இருந்தார்.

எஸ்டிஆர் 48 படத்திற்கு கிட்டத்தட்ட 300 கோடிகள் வரை பட்ஜெட் போட்டிருந்தார் தேசிங்கு பெரியசாமி. கமல் இந்த படத்தின் பட்ஜெட்டை குறைக்கும்படி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் பட்ஜெட் குறைக்கும் முயற்சி கை கொடுக்கவில்லை. இதனால் எஸ்டிஆர் 48 படமும் டிராப்பானது. நல்ல கதை என்பதால் சிம்பு இந்த படத்திற்கு வேற ஒரு தயாரிப்பாளரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News