Connect with us
boomerang-movie

கமல், ரஜினி பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட். அஜித் வருவாரா?

News | செய்திகள்

கமல், ரஜினி பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட். அஜித் வருவாரா?

rajinikanth-kanalhaasanதென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. அப்போது விஷால் பத்திரிகையாளர்களிடம் பேசினார். நடிகர் சங்கத்திடம் ரூ.48 லட்சம் இருப்பு இருந்தது. மேலும் ரூ.2 கோடி கடன் வாங்கி மொத்தம் ரூ.2 கோடியே 48 லட்சம் செலுத்தி நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம்.

தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கட்டிட நிதி திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10–ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரை உலகினரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடக்கின்றன. நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். அதே நேரம் நடிகர் சங்கம் என்று வரும்போது, கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அழைக்க இருக்கிறோம். இதற்காக தேதி கேட்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு விஷால் கூறினார். அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத அஜித், இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top