சினிமா, குடும்பம் எதுவும் வேண்டாம்.. சாமியாராக நினைத்த ரஜினியை மாற்றிய கமலின் வார்த்தைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 70 வயதிலும் ஒரு நடிகரை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள் என்றால் அது ரஜினிக்கு தான் சாத்தியம்.

இப்படி வயது கடந்தும் சினிமாவில் சாதித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் பித்து பிடித்தது போல் ஆகி சினிமாவே வேண்டாம் என தூக்கி எறிய இருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அதைப்போல் ஆன்மீகத்திலும் அவருக்கு நாட்டம் இருந்து சாமியாராக போக முடிவெடுத்தாராம்.

ரஜினி எடுத்த பாபா திரைப்படமே அவர் அடுத்ததாக சாமியாராக போகிறார் என்பதை சொல்லாமல் சொல்லியது. அந்த படத்தின் கிளைமாக்ஸில் திரும்பி தமிழ்நாட்டுக்காக வருவது போல் இருந்தாலும் அவருடைய ஆழ்மனதில் ஆன்மிகம் பக்கம் போய்விட வேண்டும் என்ற நினைப்பு தான் அதிகளவில் இருந்ததாம்.

இதைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது குறித்து பல பேர் ரஜினியை சந்தித்து பல அறிவுரைகள் கூறினாலும் ரஜினியின் மனது என்னமோ ஆன்மீகத்தை தான் தேடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில்தான் ரஜினியின் நண்பரான கமல் ரஜினியை சந்தித்து சில நிமிடங்கள் பேசியுள்ளார். அதில், சினிமாவையும் ஆன்மீகத்தையும் ஒரே நேரத்தில் எப்படி கடைபிடிப்பது என்பதை யோசித்துப் பாருங்கள் என கூறினாராம்.

நீங்கள் சினிமாவில் இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். யாருக்குமே கிடைக்காத இந்த இடத்தை இவ்வளவு ஈசியா தூக்கி வீசிட்டு போகாதீங்க. மக்களிடம் கிடைத்த இந்த செல்வாக்கை வைத்து திரும்ப அவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என அறிவுரை கூறினாராம் கமல்.

அதுவரை ஆயிரம் பேர் அறிவுரை சொல்லியும் எதுவுமே ரஜினிக்கு தெளிவு கொடுக்காத நிலையில், கமல் சொன்ன வார்த்தையில் உண்மையாலுமே அவரது மனது புத்துணர்ச்சி அடைந்து விட்டதாம். அதிலிருந்து தான் தற்போது வரை சினிமா மற்றும் ஆன்மீகம் இரண்டையும் தனித்தனி பாதையில் வைத்து இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

rajini-kamal-cinemapettai-01
rajini-kamal-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்