fbpx
Connect with us

Cinemapettai

ஓவியா உனக்கு இந்த திமிர் வேண்டாம் – கமல் அறிவுரை

kamal

News | செய்திகள்

ஓவியா உனக்கு இந்த திமிர் வேண்டாம் – கமல் அறிவுரை

நேற்று ஜூலியின் குட்டை குறும்படம்  மூலம் போட்டு உடைத்தார் கமல். இதனால் சந்தோசம் கொண்ட ஓவியா திடீர் என்று ஜூலியை F letter கெட்ட வார்த்தையால் திட்டினார்.

இதனை கண்டித்த கமல் ஓவியாவிடம் இனி எந்த கெட்ட வார்த்தையும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்ய சொன்னார். ஓவியாவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி அதற்கு பதில் fish என்று சொல்கிறேன் என்றார். மீண்டும் கமல் “இதுதானே வேண்டாம்கிறது, அதற்கு பதில் இதெல்லாம் இல்லை, இனி எப்போதும் கெட்ட வார்த்தை சொல்லக் கூடாது” என்று அறிவுரை சொன்னார்.

இதனை ஏற்ற ஓவியா இனி “ஓம் சாந்தி, ஓம் சாந்தி” என்று கூறி தன்னுடைய கோவத்தை கட்டுபடுத்தி கொள்வதாக இறுதியாக ஒப்புகொண்டார்.

அதன் பிறகு எலிமினேஷன் பற்றி கூறிய கமல் “முதலில் யார் safe என்று கூறுகிறேன்” என்றார். உடனே ஓவியா “இதுல என்ன doubt? நான்தான் safe” என்றார். உடனே கமல் “இந்த திமிர்தானே வேண்டாம்கிறது, கொஞ்சம் விட்டால் போதுமே, உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சிறிய சந்தோசம் உங்கள் மனதில் திமிரை ஏற்படுத்தாமல் திருத்தத்தை ஏற்படுத்தட்டும், நீங்கள் இந்த வாரம் safe தான்” என்று அறிவித்தார் கமல்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: கொடுபகைவர் எனினும் சுடுசொல் மொழியாதீர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top