10 படங்களில் ஒரே கெட்டப்பில் நடித்த கமல்.. குழம்பிப் போன ரசிகர்கள்

திரையுலகில் ஒரே படத்தில் பல கெட்டப்புகளில் போடுவதில் பெயர் பெற்றவர் கமல் ஹாசன். சிவாஜிக்கு அடுத்தபடியாக இவர் போடாத கெட்டப்புகளே கிடையாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இவர் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இரட்டைவேட திரைப்படங்கள் பிரபலமாக இருந்த அந்த சமயத்தில் கமல்ஹாசன் 4 வித்தியாசமான கெட்டப்புகள் போட்டு நடித்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். அந்தப் படத்தில் அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றது போன்று நான்கு விதமாக பேசுவார்.

அந்தத் திரைப்படத்தில் தொடங்கி இவர் ஆளவந்தான், தசாவதாரம், உத்தமவில்லன் போன்ற பல திரைப்படங்களிலும் பல வித்தியாசமான தோற்றங்களில் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட கமல் ஒரே கெட்டப்பில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

ஆனால் அதுதான் உண்மை கமல், அம்பிகா நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நானும் ஒரு தொழிலாளி. இந்தத் திரைப்படத்தில் வரும் தோற்றம் போல் கமல் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார். அதனால் அந்த திரைப்படங்களை பார்க்கும் போது இது எந்த படம் என்று வித்தியாசம் தெரியாமல் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது உண்டு.

அதற்கு முக்கிய காரணம் நானும் ஒரு தொழிலாளி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்த திரைப்படம் நான்கு ஆண்டுகள் வரை படப்பிடிப்பு இழுத்து விட்டது. அந்த கால இடைவெளியில் கமல் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

அதனால்தான் அவர் ஒரு தோற்றத்தை வைத்து பல திரைப்படங்களில் நடிக்கும் நிலை ஏற்பட்டதாம். அந்த வகையில் காக்கிச்சட்டை, குரு, அந்த ஒரு நிமிடம் போன்ற திரைப்படங்களில் எல்லாம் கமல் ஒரே மாதிரியான தோற்றத்தில் நடித்து இருப்பார். பல கெட்டப்புகளுக்கு பெயர் போன கமல் இப்படி ஒரே தோற்றத்தை வைத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்ற இந்த தகவல் பலருக்கும் புதிய செய்தியாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்