fbpx
Connect with us

Cinemapettai

விஜய் அரசியலுக்கு கமல் வரவேற்பு! உஷாரய்யா உஷாரு

vijay-kamal

Politics | அரசியல்

விஜய் அரசியலுக்கு கமல் வரவேற்பு! உஷாரய்யா உஷாரு

ஆடியோ விழாவில் நடந்த விஜய் பேச்சு இப்பொழுது வரை ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்லி கொண்டே வருகின்றனர். பத்திரிக்கையாளர்களும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் பார்க்கும் போதெல்லாம் இதே கேள்வி கேட்கின்றனர். அவரவர் தங்கள் சொந்த கருத்து கூறி வருகின்றனர். சமீபத்தில் கமல்ஹாசன் அளித்த பேட்டியில்;

kamalமக்கள் நீதி மய்யதை பொருத்தவரை ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக மூடப்படவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதால் மக்கள் பாதிக்கப்பட்டு, அதற்கு ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள் கண்டிப்பாக இங்கே தேவையில்லை. பெட்ரோல் டீசல் விலையை அதிகமாக உயர்த்தி வைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நியாயமே இல்லை என்று கூறினார். மேலும் அரசியலில் விஜய் பற்றிய கேள்விக்கு கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று கூறியிருக்கிறார் கமல் ஹாசன்.

கமல் ஏற்கனவே முழு அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். அவருடைய படங்கள் முதற்கொண்டு அரசியல் பேசி வருகின்றன. நடிகர் விஜய்க்கும் ஆதரவளிக்கிறார். எதிர்காலத்தில் இரண்டு பேரும் கட்சியை அமைத்து கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால் விஜய் இதெல்லாம் தெரிந்து சற்று உஷாராக இருப்பது நல்லது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top