Connect with us

Cinemapettai

politics-rajini

Politics | அரசியல்

முதல்வர் ஆவேன் என பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.. ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: முதல்வராக பதவி ஏற்பார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைச்சிருக்க மாட்டார் என கமல் 60 விழாவில் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது, இதையொட்டி கமலுக்கு நேற்று ‘கமல் 60’ என்ற பெயரில் விழா எடுக்கப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழா விமரிசையாக நடந்தது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் பேசுகையில் “அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் முதல்வராக பதவி ஏற்பார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைச்சிருக்க மாட்டார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் அவர் முதல்வரானார்.

இது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கும். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்று சொன்னாங்க. நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னாங்க.ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது.

அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலை கவனமாக பார்க்கணும்.

சினிமா துறையில் இயக்குநராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பின்னணி பாடகராக ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது இந்த உலகில் கமல்ஹாசன் மட்டுமேதான். அவர் சிறு வயதிலேயே பல விஷயங்களை கற்றுக்கொண்டு ஆச்சர்யப்படுத்தினார். அவர் இப்போதும் என்னை பிரம்மிக்க வைக்கிறார் இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top