கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் அதிகம் அடிபட்டுக்கொண்டு இருக்கும் நபர், ரசிகர்களால் அதிகம் வறுபட்டுக்கொண்டு இருக்கும் நபராக மாறியுள்ளார் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான். காரணம் ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்கள் குறித்தும் கிண்டலான வார்த்தைகளை கூறி அதன்மூலம் மலிவான விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த சில்லறை பையன் கமால் ரஷீத் கானின் நோக்கம். அதன்படி மோகன்லாலை ஜோக்கர், சோட்டா பீம் என கிண்டலடித்தார். மம்முட்டியை ‘சி’ கிளாஸ் நடிகர் என்றார்.. ‘பாகுபலி-2’வை கார்ட்டூன் படம் என்றார்.

அதிகம் படித்தவை:  ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் மெய் சிலிர்க்கவைத்த இப்படி ஒரு தல ரசிகர்.! வைரலாகும் வீடியோ

உச்சகட்டமாக தல அஜித்-தை எருமை மாடு என்று கூட திட்டிவிட்டார். இதனால், கோபமான ராணா டகுபதி, கமால் ரஷீத் கான் தனது ட்விட்டர் கணக்கை பின் தொடராமல் இருக்க அவரை செருப்படி கொடுத்தாற்போல்  பிளாக் செய்து .இதை பார்த்து கான் அதிர்ச்சியடைந்தாலும், ராணாவின் நடவடிக்கையை ஜீரணிக்க முடியாமல், வடிவேலுவின் சூனா பானா பாணியில், “இவர் ஏன் என்னை பிளாக் செய்கிறார்..? இவருக்கு நான் ட்வீட் பண்ணியதும் இல்லை.. இவரை நான் பின்தொடரவும் இல்லையே.. இருந்தும் என்னை பிளாக் பண்ணியிருக்கிறார் என்றால் அவர் மூளையில்லாதவர் என்பதை நிரூபித்துள்ளார்” என திட்டியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்த கமால் கானை பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹாவும் பிளாக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.