புதன்கிழமை, நவம்பர் 6, 2024

முத்து மீனாவுக்கு நன்மையில் முடிய போகும் கல்யாணியின் நாரதர் வேலை.. மனோஜுடன் கூட்டணி போட்ட ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கை சீதாவிற்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கிறது என்று மீனாவின் அம்மா இந்த சம்பந்தத்தை எப்படியாவது நல்லபடியாக முடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் சீதா கல்யாணம் பண்ண போகும் மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்பதை விசாரிக்கவும் நேரடியாக பார்த்து பேசுவதற்கு மீனா மற்றும் முத்துவும் போகிறார்கள்.

அந்த வகையில் ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து மாப்பிள்ளை உடன் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் மாப்பிள்ளை இதுதான் நான் என்று தெளிவாக சொல்லும் விதமாக சில கண்டிஷன்களை போட்டு முத்து மீனாவிற்கும் அதிர்ச்சியை கொடுத்து விடுகிறார். இதனால் இந்த சம்பந்தம் வேணுமா வேண்டாமா என்ற தயக்கத்துடனே இருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் சீதா நேரடியாக பார்த்து பேசட்டும் அவளுக்கு ஓகே என்றால் மேற்கொண்டு பேசலாம் என முடிவு பண்ணி விட்டார்கள். இதற்கு இடையில் ரோகினி, சிட்டியை பார்த்து PA தொந்தரவு தாங்க முடியவில்லை. அதனால் எனக்கு உடனடியாக உதவி பண்ண வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் சிட்டி, நான் கேட்ட வீடியோவை நீங்கள் கொடுத்து விட்டால் நான் உங்களுக்கு உதவி பண்ணுகிறேன் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.

இதனால் எப்படியாவது வீடியோவை எடுத்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ரோகினி இருப்பதால் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி அதில் அனைவரும் கலந்து கொள்ளும் பொழுது முத்துவிடம் இருந்து வீடியோவை எடுத்துக் கொள்ளலாம் என்று ரோகினி பிளான் பண்ணி விட்டார். இதனை அடுத்து ஷோரூம் போன ரோகிணி, மனோஜுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே மனோஜின் நண்பர் வருகிறார்.

மனோஜின் பிசினஸை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போவதற்கு அவர் ஒரு ஐடியா கொடுக்கிறார். அதன்படி நீ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், கை நிறைய லாபம் வரும் அளவிற்கு தொழில் பண்ணுகிறாய் என்பதை வைத்து தான் அந்த ஒரு கான்ட்ராக்ட்டை பிடிக்க முடியும் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி ஒரு ஐடியாவை கொடுத்து மனோஜுடன் சேர்ந்து பிளான் பண்ணுகிறார். இதில் எப்படியாவது ரோகிணி போட்ட பிளான் நுழைத்து முத்து போனில் இருக்கும் வீடியோவை எடுத்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.

அப்படி ரோகினி கையில் அந்த வீடியோ கிடைக்கும் பொழுது சிட்டி இடம் கொடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளிவிட்டால் சீதாவின் நிச்சயதார்த்தம் நின்று போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இது முத்து மற்றும் மீனாவுக்கு ஒரு நன்மையில் தான் முடிய போகிறது. ஏனென்றால் சீதாவை பொருத்தவரை இப்பொழுதுதான் வேலைக்கு போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து குடும்பத்தின் கடன்களை அடைக்கும் விதமாக சீதா இன்னும் அடுத்தடுத்த பிரமோஷனுக்கு போயி நல்ல செட்டில் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். ஆனால் இந்த கல்யாணத்தால் எல்லாமே தலைகீழாக மாறிவிடுவது போல் இருந்தது. அதே நேரத்தில் மாப்பிள்ளையும் கொஞ்சம் கரராக பேசியதால் இந்த சம்பந்தம் நின்னு போனால் கூட யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாமல் போய்விடும்.

ஆனால் இதன் பிறகு தான் ரோகினிக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கிறது என்பதற்கு ஏற்ப முத்து கஸ்டடியில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக ரோகிணியின் ரகசியம் வெளிவர போகிறது. ஆனால் அதுவரை அல்ப சந்தோஷத்தில் ரோகினி ஓவராக ஆட்டம் போடப் போகிறார்.

- Advertisement -spot_img

Trending News