புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

மனோஜ் விஜயா மூஞ்சில் கரிய பூச போகும் ரோகிணி.. முத்து ஆடும் ஆட்டத்தில் பலியாடாக சிக்கப் போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, ரோகினியை பிளாக்மெயில் பண்ணும் தினேஷை கண்டுபிடிப்பதற்கு கிட்ட நெருங்கி விட்டார். இதை தெரிந்து கொண்ட ரோகிணி எப்படியாவது இந்த விஷயத்தில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்று திருட்டு முழி முழித்துக் கொண்டு பதட்டம் அடைய ஆரம்பித்து விட்டார். ஆனால் இதிலிருந்து எப்படி நாம் எஸ்கேப்பாக வேண்டும் என்று பிளான் பண்ணிய ரோகினி, மீனாவை சிக்க வைக்க முடிவு பண்ணிவிட்டார்.

அந்த வகையில் முத்துவிடம் இருக்கும் வீடியோவை திருடி விட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கப் போகிறார். அதாவது மீனா, வீட்டில் கொலு வைத்து நடத்தப் போகிறார். இதில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக வந்திருக்கிறார்கள். அப்பொழுது விஜயா பாட்டு பாடப் போகிறார்.

இந்த நேரத்தில் ரோகினி, முத்துவின் போனில் இருக்கும் வீடியோவை அவருடைய போனுக்கு அனுப்பி சமூக வலைதளங்களில் வெளியிட வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்துவிட்டால் விஜயா மொத்த கோபத்தையும் மீனா மற்றும் முத்து மீது காட்டும் விதமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்.

அப்படி அவர்கள் வெளியே போய்விட்டால் நம் வழியில் தலையிட மாட்டார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்த வீட்டில் இருப்பவர்களை சமாளிப்பது எழுதி என்று ரோகிணி பிளான் பண்ணி விட்டார். ஆனால் இது எதுவுமே நடக்காதபடி முத்து பக்காவாக பிளான் போட்டு தினேஷை கண்டுபிடித்து விடுவார்.

அத்துடன் தினேஷ் எதற்காக மனோஜ்க்கு மொட்டை கடுதாசி போட்டு பிளாக் மெயில் பண்ணினார் என்ற விஷயமும் அனைத்தும் வெளிவந்து விடும். அப்பொழுது ரோகினிக்கு கல்யாணம் ஆனது, ஒரு குழந்தை இருக்கிறது, பணக்கார வீட்டு பொண்ணு இல்லை, ரோகிணி பெயர் கல்யாணி, அவர்களுக்கு ஒரு அம்மா இருக்கிறது என்று எல்லா உண்மையும் முத்துவுக்கு தெரிந்து விடும்.

இந்த விஷயம் எல்லாம் முத்து ஒவ்வொன்றாக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் முன்னாடியும் போட்டு உடைப்பார். அப்பொழுதுதான் இத்தனை நாள் ஆட்டம் போட்ட மனோஜ் மற்றும் விஜயாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையப் போகிறது. பணக்கார வீட்டு பொண்ணு என்று இருவரும் சேர்ந்து தலையில் தூக்கி வைத்து ஆடிய ஆட்டத்திற்கு மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக இருவர்கள் மூஞ்சியில் கரிய பூச போகிறார் முத்து.

இனி ரோகிணி முத்துவின் பார்வையிலிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதற்கு ஏற்ப பலியாடாக சிக்கப்போவது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்குள் இந்த அண்ணாமலை உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைக்காமல் இருந்தால் எல்லாமே எதிர்பார்த்தபடி நன்றாக நடைபெறும். இதற்கு மேலும் ரோகிணி தப்பித்தால் இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் இருந்து கடைசி இடத்தை பிடித்து விடும். அதற்காக இயக்குனர் கதையை மாற்றி ரோகிணியை சிக்க வைத்து விடுவார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News