Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீரியலில் கூட ஆபாசம் முன்னணி தொலைகாட்சியை வெளுத்து வாங்கிய சின்மயி.!
தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்களை பாடியவர் சின்மயி, இவர் மீடு பிரச்சினையில் தலையிட்டு வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார், அதனால் சினிமா பிரபலங்கள் பலர் சின்மயி எதிர்த்தார்கள் ஆனால் ரசிகர்களோ இவருக்கு ஆதரவு தந்தார்கள்.
இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் சின்மயிக்கு ட்வீட் செய்திருந்தார், அதில் அவர் கூறியதாவது பிரபல சீரியலில் ஒரு பெண்ணை பழிவாங்குவதற்காக தனது சொந்த சகோதரியே ரவுடிகளை வைத்து பலாத்காரம் செய்ய கூறுகிறார்.
இந்த காட்சியை சுமார் 15 நிமிடங்கள் ஓடின அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்ணை 10 முறை பலாத்காரம் செய்யக் கூறியுள்ளார் அந்த பெண், இது வேற எந்த சீரியலிலும் இல்லை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு என்ற சீரியலில் தான்.
இந்த பதிவிற்கு சின்மயி பதில் கூறியுள்ளார் இதேபோல் சீரியலை டிவியில் கண்டால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கு நீங்கள் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார்.
