யார் இந்த கல்பனா அக்கா? என்பது தான் தற்போது பலரின் கேள்வி. தமிழ் சினிமாவின் அனைத்து பாடல்களையும் தன் குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் இவர் வேலை.

அந்த பாடல்களும் 2 லட்சம் வரை ஹிட் அடிக்கும், ஆனால், இவை அனைத்தும் இவரை கலாய்க்கும் எண்ணத்தில் பார்த்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சமீபத்தில் கபாலி ‘நெருப்புடா’ இவர் பாடியது செம்ம ரெஸ்பான்ஸ்.

ஆனால், அதுப்பற்றி எல்லாம் அக்காவிற்கு கவலையில்லை, என்னால் 10 பேர் சிரிக்கிறார்கள் என்றால் சந்தோஷம் தான், சித்ரா அம்மாவே அதை தான் என்னிடம் கூறினார்கள்.மேலும், அவர்களால் தான் நான் மேலும் மேலும் உயரத்திற்கு செல்கிறேன் என பாசிட்டிவாக பதில் அளித்துள்ளார்.