Tamil Cinema News | சினிமா செய்திகள்
90ML படத்தால் கலவாணி 2-க்கு வந்த பெரும் தலைவலி.. ஓவியா நடிப்பாரா?
தமிழ் சினிமாவில் விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு மதயானைக்கூட்டம், கலகலப்பு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக காஞ்சனா-3 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
களவாணி-2 படத்தில் தற்போது விமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கும் சற்குணத்திடம் படத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது 90 எம் எல் படத்தில் ஓவியா தம், குடிப்பழக்கம் போன்ற காட்சிகளில் நடித்திருப்பார்.
அந்த மாதிரியான காட்சிகள் இந்தப் படத்திலும் உள்ளதா எனக் கேட்டபோது அதற்கு இயக்குனர் இப்படத்தில் ஓவியா கெட்ட பழக்கங்கள் உள்ள பெண்ணான கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை மற்றும் கிரமத்து பெண்களுக்கு ஒரு சில கட்டுபாடுகள் உள்ளது என்று அவர் கூறினார்.
அதன் பிறகு இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும். மே மாதம் விரைவில் இப்படம் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
