Connect with us
Cinemapettai

Cinemapettai

vadivelu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடிவேலு பட நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைபிரபலங்கள்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான நடிகர் காளிதாஸ் மரணமடைந்தார். காமெடி மன்னனாக வலம் வரும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காளிதாஸ் பல படங்களில் நடித்துள்ளார். படங்களில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் தான் காளிதாஸ். 65 வயதான காளிதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமான தொடராக இருந்த மர்மதேசம் தொடரில் காளிதாஸின் குரல் மிகவும் பிரபலமாகும். இவரது குரலுக்காகவே இவருக்கென தனி ரசிகர்கள் இருந்தனர். இதுதவிர 1980களில் வெளிவந்த பல படங்களின் வில்லன் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தவர் காளிதாஸ்.

இதுவரை சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். இறுதியாக கே.ஜி.எஃப் 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். அதே கதாபாத்திரத்திற்கு கே.ஜி.எஃப் 1 படத்திலும் காளிதாஸ் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kalidas

kalidas

நடிகர், டப்பிங் கலைஞர் என தமிழ் சினிமாவில் வலம் வந்த காளிதாஸின் உடலில் சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவருக்கு ரத்தத்தை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, ரத்தத்தை மாற்றவும் சிகிச்சை பலனளிக்காமல் காளிதாஸ் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. காளிதாஸின் மனைவி வசந்தா ஏற்கனவே காலமாகி விட்டார். இவருக்கு விஜய் மற்றும் பார்கவி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் பார்கவி இணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். மறைந்த காளிதாஸுக்கு தமிழ் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Continue Reading
To Top