கேரளாவில் பிறந்தாலும் ஜெயராம் அவர்களின் தாய் மொழி தமிழ் தான். இவருக்கும் நடிகை பார்வதிக்கும் 1992 இல் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு மாளவிகா என்ற மகளும், காளிதாஸ் என்ற மகனும் உள்ளனர். இவர் மகனும் ஹீரோவாக ஆகிவிட்டார்.

jayaram family photo

காளிதாஸ் ஜெயராம்

நம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிப்பவர். பக்கா சென்னை பையன் தான். தமிழில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். பாண்டஸி கலந்த படமாக இருப்பினும் இவருக்கு நல்ல வரவேற்பை இப்படம் பெற்று தரவில்லை. அதன் பின் நீண்ட இடைவெளி விழுந்தது.

இவர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் பூமரம் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. கல்லூரி கலை நிகழ்ச்சியை மையமாக வைத்த இப்படம் இவருக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் வால்யூ ஏற்படுத்தி கொடுத்தது.

Kalidas Jayaram

ப்ரேமம் – அல்போன்ஸ் புத்திரன்

காளிதாஸ் அடுத்த நடிப்பது நேரடி தமிழ் படம். நேரம் , ப்ரேமம் பட புகழ் அல்போன்ஸ் இயக்கத்தில் தான் நடிக்கிறார். மற்றபடி இந்த படத்தை பற்றிய வேறு தகவல்கள் எதுவும் இல்லை.

பாபநாசம் ஜீத்து ஜோசப்

மலையாளத்தில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். மலையாளத்தில் திரிஷ்யம் ஒரிஜினல் வெர்ஷன் எடுத்தவர், மேலும் தமிழில் கமலஹாசனை வைத்து இயக்கியவர். சமீபத்தில் ஜோசப் மோகன்லாலின் மகன் பிரணவ் வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்தார்.

Kalidas Jayaram Jeethu Joseph

இந்நிலையில் காளிதாஸ் ஜீத்து ஜோசெப் அவர்களுடன் இணைந்து மலையாளத்தில் படம் பணி புரியப்போவதாக தன் பேஸ் புக் பக்கத்தில் போட்டோவுடன் தெரிவித்துள்ளார்.