விஜய் ஆண்டனி இசையில் மட்டும் வல்லமை படைத்தவர் அல்ல நடிப்பிலும் வல்லமை படைத்தவர் என நிருபித்தவர் ஏன் என்றால் அவர் படம் அனைத்தும் ஹிட் தற்பொழுது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. சுனைனா நாயகியாகவும், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவாளராகவும் இத்திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

சயின்ஸ் திரில்லர் வகைமையிலான இத்திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். வணக்கம் சென்னை இயக்கி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தை கிருத்திகா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

‘காளி’படத்தின் பெயர்க்காரணம் என்னவென்று படக்குழுவினர் இதுவரை தெரிவித்திருக்கவில்லை. ஆனால் இது பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பாம்.

கபாலி படத்துக்கும் முதலில் காளி என்று தான் பெயர் வைக்க நினைத்தார்களாம். இரண்டு படத்திலும் காளி மிஸ்ஸாகிவிட கிருத்திகா உதயநிதியின் இந்த அறிவியல்ரீதியான படத்துக்கு காளி என்று பெயர் சூட்டப்பட்டதாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராலும் இப்படத்துக்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.