தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்சதில் இருக்கும் நடிகை என்றால் அது நயன்தாராதான், இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லப் பெயர் வைத்துவிட்டார்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் இவருக்கு இந்த வெற்றி மகுடம்.

kolamaavu-kokila

கோலமாவு கோகிலா

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது டார்க் திரில்லர் ஜானர் படமாம். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு . நிர்மல் எடிட்டர்.

Yogi-Babu

இந்த கோ கோ முழுப்படத்துலயும் நயந்தாராவோட சேர்ந்து கலக்கப் போறது நகைச்சுவை நடிகர் யோகி பாபு என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுவதாக முன்பே அனிருத் வீடியோ வாயிலாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் “கல்யாண வயசு” என்ற அந்த பாடலின் டீஸர் வெளியாகி உள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான இது வரும் மே 17 ரிலீசாகிறது.