சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா இணைந்து நடித்த படம் ‘களவாணி’. 2010-ல் வெளியான இப்படம் அணைத்து சென்டரிலும் ஹிட் ஆனது . விமல் மற்றும் ஓவியா இருவரையும் நம்ம வீட்டு பிள்ளையாகியது இப்படம் தான்.

இரண்டு நாட்களுக்கு முன் நடிகை ஓவியா இயக்குனர் சற்குணத்தின் தயாரிப்பு நிறுவனத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டார். ‘வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்பது தான் அந்த நிறுவனத்தின் பெயர். நேற்று தன் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படம் பற்றி சஸ்பென்ஸ் ஒன்றை வைத்தார் இயக்குனர்.

இன்று அதே களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இவர் இயக்குகிறார் என்பது உறுதி ஆகியுள்ளது. K 2 என்று பெயர் வைத்துள்ளார்கள் . விமல் மற்றும் ஓவியா தான் இப்படத்திலும் நடிக்கின்றனர்.

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்தார்.

K2

இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.