Prabhu Deva - Bhumika
Thangar Bachan

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ், சத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடலை அறிவுமதியும், வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்கள்.  இந்தப் படத்துக்கு, தங்கர் பச்சானே ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை ஐங்கரன் நிறுவனம் சார்பில் கருணாகரன் தயாரித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகரின் தம்பியுடன் சுற்றும் ஸ்ரீதேவி மகள்- லீக்கான நெருக்கமான புகைப்படம் உள்ளே

மூன்று வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்குத்தயாராக இருந்தது. ஆனால், பைனான்ஸ் பிரச்னை காரணமாக வெளியாகாமல் அப்படியே நின்றுவிட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிக்கப்பட்டு, படம் டிசம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

‘காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார் தங்கர்பச்சான்.

அதிகம் படித்தவை:  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய சீனா ஆர்வம்

‘தேவி; படத்தை தொடர்ந்து பிரபு தேவா நடிப்பில் வெளியாகவுள்ள ‘களவாடிய பொழுதுகள்’வெளியாகும் அதே 29-ஆம்  தேதி ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் இணைந்து நடித்துள்ள ‘பலூன்’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது.