நடிகர் விமல்,  நடிகை ஓவியா மற்றும் கஞ்சா கருப்பு, சூரி நடித்து மெகா ஹிட்டான படம். குறைந்த பட்ஜெட்டில் அதிக வருமானம் தந்த படம் களவாணி.

இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சற்குணம். ஹீரோயினாக அறிமுகமானார் ஓவியா. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. விமல் ஹீரோவாக நடிக்கிறார்.

சற்குணமே இயக்குகிறார். சூரி, கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஆனால், ஓவியா ஹீரோயினாக நடிப்பாரா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விமல், இதைத் தெரிவித்தார்.இவர் இப்போது பூபதி பாண்டியன் இயக்கும் ’மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதை விமலின் ஏ 3 வி சினிமாஸ் தயாரித்துள்ளது. அடுத்து ‘வெற்றிவேல்’ வசந்தமணி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், நமக்கு கிடைத்த தகவலின் படி ஓவியா இந்த படத்தில் நடிக்க மாட்டார் என்றும். அவருக்கு பதிலாக புதுமுக நடிகை ஒருவர் நடிப்பார் எனவும் கூறுகிறார்கள்.