fbpx
Connect with us

களரி திரை விமர்சனம்.!

Reviews | விமர்சனங்கள்

களரி திரை விமர்சனம்.!

பயந்த ஒருவன் தனது தங்கைக்காக பழிவாங்கும் படமே களரி, கேரளாவில் கொச்சியில் பழச்சரக்கு கடை நடித்தி வருபவர் கிருஷ்ணா இவர் பயம் என ஒரு கொடிய நோயால் பாதிக்கபட்டிருப்பார் அவர் பயபடுவதுக்கு காரணம் தனது தந்தை குடியால் நடத்திய கொடுமைதான்.

kalari

பழக்கடை நடத்திவரும் கிருஷ்ணாவுக்கு தனது தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்பது தான் லட்சியம், ஆனால் குடிகாரதந்தையால் வரும் வரன் அனைத்தும் கேட்டுபோகிறது தனது குடிகார தந்தையை சம்மாளிக்க துணிவில்லாத கிருஷ்ணா என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்.

அப்பொழுது உள்ளூரில் இருக்கும் விஷ்ணுவை கிருஷ்ணா தங்கை காதலிக்கிறார் ஆனால் அவரையும் குடிகார தந்தை அவமானபடுதுகிறார், இதனிடையில் உள்ளுரில் முக்கிய புலி சித்திக்கிடம் வேலைபார்க்கும் மூர்த்திக்கு தேன்மொழி மீது காதல் வருகிறது அதனால் அவரது தந்தைக்கு சரக்கு வாங்கிகொடுத்து மகளை கரெக்ட் செய்யும் வேலையை பார்க்கிறார் தேன்மொழி வாரை திருமணம் செய்தார், அவரது திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.

தங்கை மீது அதீத பாசம் வைத்திருக்கும் அண்ணன் கிருஷ்ணா கோழையாக போகிறவர் வருகிறவர் என அனைவரிடமும் அடி உதய் வாங்குகிறார் யாரையும் அடிக்க தைரியம் இல்லாத கோழையாக அவரின் கதாபாத்திரத்தை அழகாக நடித்துள்ளார், மேலும் நடிகை வித்யா பிரதீப்பின் வேலை கிருஷ்ணாவை காதலிப்பது அதைஅவர் நிறைவு செய்துவிட்டார், கிருஷ்ணாவின் தங்கையை பற்றி சொல்லவே வேணாம் இனி அடிக்கடி சினிமாவில் பார்க்கலாம் அற்புதமாக நடித்துள்ளார்.

தங்கை தனது வாழ்க்கையை இழக்கும் பாசமலர் காலத்து அண்ணன் கதை களரி என பெயர் வைத்துள்ளார்கள், பழைய காலத்து படத்தை போல் ஒரு படம் ஹீரோ இபொ கொவபடுவார் அப்போ கொவபடுவார் என ஆடியன்ஸ் எதிர்பார்த்து அவர்கள் தான் கொவபடுகிரார்கள்.

தங்கச்சி இப்படி கஷ்டத்துல இருக்கும் பொது எந்த அண்ணனாவது டூயட் ஆடுவானா ஹீரோ அப்பாவி தான் அதுக்காக இப்படியா. எம்.எஸ்.பாஸ்கர் எந்நேரமும் குடிச்சுகிட்டே இருப்பது ஒருக்கட்டத்துல சலிப்பை ஏற்படுத்திடுது. தயது செய்து பிளாக் பாண்டிய நம்பியெல்லாம் இனி காமெடி டிராக் அமைக்காதீங்க இயக்குனர் சார்.

படத்தில் கேரளாவில் தமிழர் பகுதியை அழகாக காட்டியுள்ளார்கள் குருதேவின் ஒளிபதிவு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே அண்ணன் தங்கை செண்டிமென்ட் பார்த்துவிட்டதால் படம் ஒருமுறை பார்க்கலாம்..

களரி : 2.75 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top