Tamil Cinema News | சினிமா செய்திகள்
கலகலப்பு-2 தெறிக்கும் வசூல் நிலவரம்.! மகிழ்ச்சியில் படக்குழு

முதலில் மசாலா கஃபே என்று பெயர் வைக்கப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டு வெளிவந்த படம் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கி இருந்த இந்த படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. குஷ்பு தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தில் மிர்ச்சி ஷிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா,நந்திதா ஸ்வேதா, ரோபோ ஷங்கர், ராதா ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.
கலகலகப்பு முதல் பாகத்திதை விட இந்த இரண்டாம் பாகத்திலும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை அதனால் தான் படத்தை பார்க்க அனைவரும் வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு வந்த கலகலப்பு-2 படம் இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டும் இதுவரை 3.6 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதேபோல் தமிழகத்தில் இதுவரை 17 கோடி வரை வசூல் சேர்ந்துள்ளது எப்படியும் இந்த வாரம் பெரிய படம் வரவில்லை என்றால் கலகலப்பு-2 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.
