Kalakalappu-2
Kalakalappu-2-

2018-ல் பல திரைப்படங்கள் திரைக்கு வந்தன ஆனாலும் எத்தனை படம் வெளிவந்தாலும் இந்த வருடத்தில் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் திருப்தியாய் லாபம் கொடுத்த முதல் படம் என்ற பெருமையை சுந்தர் சி இயக்கிய கலகலப்பு-2 திரைப்படத்திற்கு கிடைத்ததுள்ளது.

Kalakalappu-2

கலகலப்பு-2 திரைப்படம் கடந்த மாதம் 9 ம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது இந்த படம் இதுவரை சென்னையில் மட்டும் 4,23,65,483 ருபாய் வசூல் சேர்த்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக வேறு எந்த புதிய திரைப்படமும் வெளியாகததால் இன்னும் கலகலப்பு-2 விற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

kalakalappu

கடந்த வார இறுதியில் இந்த படம் சென்னையில் 13 திரையரங்குகளில் 108 காட்ச்சிகள் வெளியிடப்பட்டது அதில் 27,43,733 ரூபாய் வசூல் சேர்த்துள்ளது அதேபோல் திரையரங்கிலும் 80% கூட்டம் குறையாமல் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.