கலைப்புலி தாணு கபாலி படத்தின் விளம்பரத்தில் புதிய புதிய முயற்சிகளை செய்து வருகிறார். விமானத்தில் ஆரம்பித்து கோல்ட் காயின் வரை கபாலியை கொண்டு வந்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இப்படம் குறித்து ஒரு ஆங்கில பத்திரிக்கையில் பேட்டியளித்துள்ளார். இதில் கபாலி வியாபாரம் ரூ 200 கோடிக்கு ஆனதா? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘இந்த படத்தின் வியாபாரத்தை விடுங்கள், ஆனால், வசூல் டூ 500 கோடியை தாண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை’ என கூறியுள்ளார்.