பா ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்த கபாலி படம், ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்காவாது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்கிறது. இன்றைக்கு ஒரு படம் முதல் மூன்று நாட்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம் என்ற சூழலில், திருட்டு வீடியோ, படம் பார்க்காமலேயே எதிர்மறையாகக் கருத்து பரப்பியவர்களுக்கு மத்தியில் கபாலி ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  நெருப்பு டா...மேலும் ஒரு உலக சாதனை படைத்த கபாலி !

கபாலி வெளியீட்டுக்கு முன்பு, சோளிங்கர் ரசிகர்கள் மாநாட்டில் கலைப்புலி தாணு பேசுகையில், ‘கபாலி பெரிய வெற்றிப் பெறும். அந்தப் படத்துக்காக நான் மிகப் பெரிய விழா எடுக்கப் போகிறேன். ஒரு மாநாடு மாதிரி. ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், தீவுத்திடல் மாதிரி பெரிய மைதானத்தில் விழாவை நடத்தப் போகிறேன்,” என்று கூறியிருந்தார்

அதிகம் படித்தவை:  தெறி டீசெர் சாதனைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பார் ?

இப்போது தான் சொன்னதை நிறைவேற்றப் போகிறார். கபாலியின் 25-ம் நாளன்று இந்த விழாவை கலைப்புலி தாணு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இதில் பங்கேற்க ரசிகர்களுக்கும் அழைப்பு உண்டு. ரஜினியும் இந்த விழாவை நடத்த ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தெரிகிறது.