Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-thanu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் கர்ணன் விஷயத்தில் அவசர பட்டுட்டோமோ? போட்டதுல பாதி கூட வராது போல என புலம்பலில் தாணு

ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் அடுத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படத்தை தான். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படம் கடைசி வரை தியேட்டர் ரிலீஸ் என கூறி வந்தனர்.

ஆனால் தியேட்டர்காரர்களை விட நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக லாபம் கொடுத்ததால் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் நேக்காக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு படத்தை தூக்கி கொடுத்து நல்ல லாபம் பார்த்து விட்டார்.

இந்த விஷயத்தில் தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் தயாரிப்பாளர் முடிவுதான் சரி என இப்போது பேச்சுக்கள் மாறி உள்ளன. அதற்குக் காரணமும் இருக்கிறது.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் தியேட்டர்களில் வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்திற்காக தாணு தற்போது வியாபாரத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக 25 கோடி வரை லாபம் கிடைப்பதாக செய்திகள் வெளியானது. அது முற்றிலும் உண்மை இல்லையாம்.

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிய விலையில் பாதிகூட தியேட்டர்காரர்களை நம்பி இறங்கும் போது கர்ணன் படத்தில் தாணுவுக்கு கிடைக்கவில்லையாம். இதனால் பேசாமல் ஜகமே தந்திரம் படத்தை போல ஒடிடி தளத்தில் கொடுத்து விடலாமா என யோசனை செய்கிறாராம்.

kalaipuli-s-thanu-dhanush-cinemapettai

kalaipuli-s-thanu-dhanush-cinemapettai

அப்படி செய்துவிட்டால் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் நமக்கு ரசிகர்கள் மத்தியில் பணத்தாசை பிடித்தவர் என பட்டம் கட்டி மானத்தை வாங்கி விடுவார்கள் என்பதற்காக லாபமோ நஷ்டமோ தியேட்டரிலேயே வெளியிடலாம் என மனதைத் தேற்றிக் கொண்டுள்ளாராம் தாணு.

Continue Reading
To Top