Connect with us

Cinemapettai

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்

kalaignar-karunanithi

Cinema News | சினிமா செய்திகள்

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதியாக விளங்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். இவர் ஜூன் 3, 1924 ஆம் ஆண்டு முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையாரின் தம்பதிகளின் மகனாக பிறந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் தமிழ் இலக்கணத்தின் மீது பற்று கொண்டவர். ஆரம்ப காலத்தில் அவர் கதை, வசனம் எழுதிவராக இருந்தார். அவரது  கதைகள் அனைத்தும் விதவை மறுமணம், ஜமீன்தார் முறையை ஒழித்தல், சுயமரியாதை திருமண ஒழிப்பு போன்றவற்றை சார்ந்ததாகவே இருக்கும்.

1967இல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள் திடீர் மரணம் அடைந்ததால்  பதவி பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அண்ணாதுரை வகித்த தலைமை அமைச்சர் பதவியை மு கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன்பின் அவர் அது  1971 ,1989, 1996,மற்றும் 2006 இல் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

kalaignar-karunanithi-diedவிருதுகள்;

  1. அண்ணா பல்கலைக்கழகம் இவரை கௌரவித்தது டாக்டர் பட்டம் வழங்கியது.

2. தமிழக கழகம் அவரது படைப்பான  “ தென்பாண்டி சிங்கம் ” என்ற புத்தகத்திற்கு “ ராஜராஜன் விருது ” வழங்கியது.

3. தமிழ்நாட்டு கவர்னரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவரை டாக்டர் பட்டம் வழங்கி   கௌரவித்தனர்.

இப்படி தன் அரசியல் வாழ்க்கையில் சாதித்த இவர் மறைந்து இன்றுடன் 100 நாள் ஆகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top