Politics | அரசியல்
திராவிட இயக்கத்தின் தூண் சரிந்தது! மறைந்தார் கலைஞர் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்றும் மாலை 4.30 மணிக்கு வெளியாகியுள்ள காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர் காவல் இணை ஆணையர் அன்பு, மயிலாப்பூர் காவல் ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் நேற்று பகல் 12.30 மணியளவில் மருத்துவனைக்கு வந்து நிலவரத்தை ஆராய்ந்தனர். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையும் அவர்கள் சந்தித்தனர்.
இதனிடையே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். அவரை இழந்த சோகத்தில் கருணாநிதியுன் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர்.
மாம்பெறும் வரலாற்று தலைவரை நாம் இழந்துவிட்டோம் அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் வரலாறு சொல்லும் அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.
