சினிமாவை வெறுத்து ஒதுக்கிய முதல்வர்.. சமாதானப்படுத்தி சாதிக்க வைத்த எம்ஜிஆர்

அரசியல் சாணக்கியராக திகழ்ந்த கலைஞர் மு கருணாநிதி திரைத்துறையிலும் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார். அந்த வகையில் இவர் பராசக்தி உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

அதில் இவர் அபிமன்யு என்ற படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். அந்தப்படம் தியேட்டரில் வெளியான போது தன்னுடைய பெயர் திரையில் வருவதை பார்ப்பதற்கு கலைஞர் மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார். அதனால் தன் குடும்பத்துடன் அவர் அந்த படத்தைப் பார்க்க சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. படத்தில் அவருடைய பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. இதனால் கோபமடைந்த கலைஞர் தயாரிப்பாளரிடம் சென்று இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் இப்போது அதிக பிரபலம் கிடையாது. பிரபலமான பிறகு உங்கள் பெயரை வெளியிடுகிறோம் என்று பதில் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கலைஞர் சினிமா துறையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அதன் காரணமாக அவர் தன் குடும்பத்துடன் சொந்த ஊரான திருவாரூருக்கே சென்றுவிட திட்டமிட்டார். இதை அறிந்து கொண்ட அவரின் நண்பரான எம்ஜிஆர் கலைஞரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு தான் கலைஞர் ஒரு வழியாக கோபம் தணிந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இப்படி ஆரம்பித்த அவருடைய கலைப்பயணம் பல வருடங்கள் தாண்டியும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அந்த வகையில் கலைஞரின் இந்த சாதனைக்கு எம்ஜிஆர் ஒரு விதத்தில் காரணமாக இருந்துள்ளார். அவர் மட்டும் அன்று கலைஞரை சமாதானப்படுத்தாமல் இருந்திருந்தால் திரைத்துறை மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்திருக்கும். சிறந்த எழுத்தாற்றல் மிக்க கலைஞர், சிவாஜி, எம்ஜிஆரில் ஆரம்பித்து இளைய தலைமுறை வரை பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்