5 படங்கள் ஹிட்டாகியும் ஹீரோ இல்லனு முத்திரை குத்தப்பட்ட நடிகர்.. ஆர்யா, சூர்யா கூட நடித்தும் பிரயோஜனம் இல்ல

ஹீரோக்களுக்கு இணையாக நடித்து புகழ்பெற்ற ஒரு நடிகர் 5 படங்கள் ஹிட் கொடுத்தும் தன்னால் ஹீரோவாக முடியவில்லை என்ற ஏக்கத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். அப்படி அதிர்ஷ்டமில்லை என முத்திரை குத்தப்பட்ட நடிகர் கலையரசனின் படங்களின் லிஸ்ட் தற்போது பார்க்கலாம்.

முகமூடி: மிஸ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஜீவா,பூஜா,நாசர் மற்றும் நரேன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் கலையரசன், விஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்து துணை நடிகராக பெயர் பெற்றவர்.

Also read: ஜீவா தன்னை நிரூபித்து ஜெயித்த 6 படங்கள்.. சமீபத்தில் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

மதயானை கூட்டம்: 2013 ஆம் ஆண்டு கதிர், ஓவியா, விஜி சந்திரசேகர் இணைந்து பூலகரசா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்திருப்பார். இந்த படத்தில் சிறிய வேடங்களில் நடித்து தன் திறமையை வெளிக்காட்டிருப்பார்.

மெட்ராஸ்: 2014 ஆம் ஆண்டு அரசியலை மையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கார்த்தி,கேத்தரினா,கலையரசன் மற்றும் ரித்விகா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் அன்பு என்னும் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கார்த்திக் இணையாகவே இவரின் நடிப்பு பேசப்பட்டு வந்தது. இந்த படத்தின் மூலம் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்த்து இருந்தார் ஆனால் அமையல.

Also read: 4 திருப்புமுனை இயக்குனர்களை கழட்டிவிட்ட சூர்யா.. வணங்கானைத் தொடர்ந்து வாடிவாசலுக்கு கொடுத்த டிமிக்கி

தானா சேர்ந்த கூட்டம்: 2018 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் மற்றும் செந்தில் இவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இதில் சூர்யாவின் பிரண்ட்ஸாக நடித்திருப்பார்.

சார்பட்டா பரம்பரை: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படம் ஆகும். இதில் ஆர்யா, சபீர், துசரா விஜயன், பசுபதி மற்றும் அனுபமா குமார் இவருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also read: கார்த்தியுடன் கூட்டணி சேர்ந்த விஜய்சேதுபதி பட ஹிட் இயக்குனர்.. மிரட்டலான கூட்டணி

இவ்வாறு நடித்த அனைத்து படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கலக்கியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது.இவர் நடித்த அந்தப் படங்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட்டானாலும் இவரால் பெயர் சொல்லும்படி இவருக்கு அமையவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்