இறந்த நடிகர் கலாபவன் மணியின் உடலில் அளவுக்கு அதிகமான மீத்தைல் ஆல்கஹால் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்ய திட்டமிட்டு, மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அவர் இறந்த அன்று இரவு அவருடன் இருந்தவர்களிடம் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர்களான ‘தரிகிட’ சாபு, ‘ஜாஃபர் இடுக்கி’ ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.

தற்போது கலாபவன் மணியின் அண்ணன் ராமகிருஷ்ணன் ஜாஃபர் இடுக்கி பற்றி பகிரங்கமாக முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார்.சில புகைப்படங்களை பகிர்ந்து அதில் “இது சதி என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.

மணி அண்ணாவின் மரணத்தில் தொடர்புடைய ஜாஃபர் இடுக்கியை, மணி அண்ணாவின் மற்ற நண்பர்கள் அழைத்து வரவேற்பதை இங்கே பாருங்கள்” என கூறியுள்ளார்.

அவர் நண்பர்கள் அனைவரும் இணைந்து கலாபவன் மணியை கொலை செய்துவிட்டார்கள் என மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.