fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அரசியல் களத்தில் கிழி கிழி என கிழிக்க கட்சியில் இணைந்த கலா மாஸ்டர். கட்சி தலைமையுடன் க்ளிக்கிய போட்டோஸ் உள்ளே.

kala master

Politics | அரசியல்

அரசியல் களத்தில் கிழி கிழி என கிழிக்க கட்சியில் இணைந்த கலா மாஸ்டர். கட்சி தலைமையுடன் க்ளிக்கிய போட்டோஸ் உள்ளே.

அ.ம.மு.க -வில் இணைந்துள்ளார் கலா மாஸ்டர்.

கலா என்பது பெயர், மாஸ்டர் என்பது தொழில் முறையால் வந்து ஒட்டிக்கொண்டது. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக பணியாற்றி வந்த இவர் தற்போது அரசியல் என்ட்ரி கொடுக்கிறார்.

அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடன இயக்குநர் கலா டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார்.

KALA MASTER

“என் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தப் போது தினகரனின் நேர்மையான பேச்சு, துணிச்சலான செயல்பாடுகள், எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் என்னைக் கவர்ந்தன.

KALA MASTER

KALA MASTER

என்னைப் பொறுத்தவரை ஒரு டான்ஸ் ஷோவுக்கு காஸ்டியூம் செலக்ட் செய்வதாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய அர்ப்பணிப்பு கண்டிப்பாக இருக்கும். அதேபோலத்தான், இந்தக் கட்சியின் உறுப்பினராக இணைந்திருக்கும் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். அவர்களுடைய உயர்வுக்கு நானும் என் கணவரும் நிச்சயம் உழைப்போம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் அரசு சார்பில் நிறைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துச் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தினகரன் நல்ல மனிதர். அவர் கட்சியில் நான் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது.” எனவும் சொல்லியுள்ளார் நம் மாஸ்டர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top