Reviews | விமர்சனங்கள்
உலகதரத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லர்- டோவினோ தாமஸின் ‘களை’ திரை விமர்சனம்
டோவினோ தாமஸ் மலையாள சினிமாவில் நெக்ஸ்ட் ஜென் நடிகர்களில் முக்கியமானவர். நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து பரிச்சயமானவர். இவர் நடித்தது மட்டுமன்றி இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இயக்குனர் வி எஸ் ரோஹித் மற்றும் யாது புஸ்பகரன் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.
டோவினோ தாமஸ், சுமேஷ் மூர் என்ற இரண்டு முக்கிய ரோல்கள் தான் படத்தில். இந்த இருவரை வைத்து அதில் மிருக வன்கொடுமையை கலந்து, மனிதனில் இருக்கும் மிருகத்தனத்தை படம் பிடித்து காட்டியுள்ளனர். முன்பே திரை அரங்கில் ரிலீஸ் ஆன இப்படம் அமேசான் ப்ரைம் தலத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
கதை – பணக்கார வீட்டில் மகனாக டோவினோ தன் மனைவி திவ்யா பிள்ளை மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அப்பா லால் மகன் உதவாக்கரை என்பதனை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுட்டி காட்டுகிறார். செய்த வியாபாரம் அனைத்திலும் தோல்வி, கடன் சுமை என உள்ளார் டோவினோ. அப்பா முன்பு சாந்தமாகவும், அவர் சென்ற பின் கெத்தகாவும் சுற்றுவது இவரது வாடிக்கை.
அப்பாவுக்கு அன்று ட்ரீட்மெண்ட், மனைவி பிறந்த வீட்டுக்கு செல்ல, இவரே தனது வீட்டில் தோட்ட வேலைக்கு வரும் ஆட்களை வைத்து திருட செட் செய்கிறார். வீட்டில் உள்ள மிளகை திருடி கடனை அடைக்கும் சூப்பர் திட்டம்.
எனினும் வந்ததில் ஒருவன் (சுமேஷ் நூர்) மட்டும் இவரை சீண்டுகிறான். விசாரித்ததில் காட்டுவாசி பையன் என்பது தெரிய வருகிறது. சில தினங்களுக்கு முன்பு குடி போதையில், விரக்த்தியில் இருந்த சமயத்தில் மாமிசத்தில் வெடிமருந்தை நிரப்பி ஒரு நாட்டு நாயை சாவடித்தான் டோவினோ. அதற்கு பழி தீர்க்கவே நூர் வந்திருக்கிறான். அவன் நோக்கம் டோவினோவின் நாயை கொலை செய்வது.

kala
இந்த இருவருக்கும் நடக்கும் சண்டை, மன போராட்டம் என்பதனை மட்டுமே அடுத்த ஒரு மணிநேரம் பல ட்விஸ்டுடன் துளியும் போர் அடிக்காமல் படமாக்கியுள்ளனர் இந்த டீம்.
சினிமாபேட்டை அலசல் – வெறும் சண்டை படம் என சொல்லிவிட முடியாது. இப்படத்தில் பல சைக்கலாஜிக்கல் விஷயத்தை புகுத்தியுள்ளனர். ஒரு லயன் போல கதை தோன்றினாலும், அதனை படமாக்கிய விதம் சிறப்பு. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, டான் வின்சென்ட் இசை, சமன் சாக்கோ இசை படத்திற்கு பெரிய பிளஸ்.
தன் காமராவின் விழிகளில் அந்த தோட்டம், மலை, சண்டைக்காட்சிகளை அட்டகாசமாக படமாக்கியுள்ளார் அகில். இசை நம் காதுகளை ரீங்காரம் செய்து, ஒருவித திகில் உணர்வை ஏற்படுத்துகிறது.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த விதம் அருமையோ அருமை. கிளைமாக்ஸில் பன்றி வேட்டை ஆடும் காட்சி மற்றும் டோவினோ – நூர் இருவரும் மோதும் காட்சி என பிராமதப் படுத்தியுள்ளார் இயக்குனர்.
தன் நாயுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு பழி வாங்க, அதே வேதனையை டோவினோவுக்கு கொடுக்க நினைத்த நூர், இறுதி காட்சியில் மன நிறைவுடன் நடக்கும் காட்சியில் நம் மனதில் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறார்.
மிருகம், மனிதன் என யாவுமே உயிரினம் தான், அதில் உயர்ந்தது தாழ்ந்தது என எதுவும் இல்லை என படத்தை முடிக்கிறார் இயக்குனர்.
தமிழ் டப்பிங் உடன் அமேசானில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும் மலையாளத்தில் மட்டுமே ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகி உள்ளது.. விரைவில் தெலுங்கு, ஹிந்தி, தமிழில் இப்படத்தினை பார்க்க இயலும் என்கின்றனர் .
சினிமாபேட்டை ரேட்டிங் – 3.5 / 5
