இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ திரைப்படம் விவசாயிகளின் பிரச்சனைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. விவசாயிகள் இடையே பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய இந்த படத்தை அடுத்து ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் தனது அடுத்த படத்தில் விவசாயி பிரச்ச்னையை கையில் எடுக்கின்றார்.

தற்போது விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடித்து வரும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை இயக்கி வரும் மணிகண்டன் அடுத்து இயக்கவுள்ள படத்தின் டைட்டில் ‘கடைசி விவசாயி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவசாயிகள் படும் கஷ்டங்களை மிக எளிமையாக அதே நேரத்தில் அழுத்தமாக இயக்குனர் சொல்லவுள்ளாராம்.

‘காக்கா முட்டை’ படத்தில் சேரிப்புற மக்களின் வாழ்வை எதார்த்தமாக காட்டிய மணிகண்டன் நிச்சயம் இந்த படத்திலும் விவசாயிகள் பிரச்சனனயை ‘கத்தி’க்கு பின்னர் அழுத்தமாக பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.