தனக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்ற செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.ராணாவும், காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் காஜல்.

ஆனால் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.
காஜலும், ராணாவும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து அறிந்த காஜலோ, நானும், ராணாவும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தல பற்றி பிரபலங்கள் என்னெல்லாம் சொல்றாங்க தெரியுமா?

நானும், ராணாவும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளோம். நட்பை தவிர எங்களுக்கு இடையே வேறு எதுவும் இல்லை. அவர் கடினமாக உழைக்கும் நடிகர் என்கிறார் காஜல்.பாகுபலியின் வெற்றியால் ராணா மாறிவிடவில்லை. அவர் எப்பொழுதுமே நல்ல நடிகர். அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பாகுபலி பெற்றுத் தந்துள்ளது என்று காஜல் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ராணாவை பற்றி கசிந்த சுவாரஸ்ய தகவல்!!

பாலிவுட்டில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். நல்ல கதை கிடைத்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்வேன். எனக்கு நிம்மதி அளிக்கும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் என்கிறார் காஜல்.