Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹை ஹீல்ஸால் பொதுவெளியில் விழுந்த கஜோல்..

மும்பை மாலில் ஹை ஹீல்ஸால் நடிகை கஜோல் தடுமாறி விழுந்த சம்பவம் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை கஜோல் பாலிவுட்டில் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பாலும், கவர்ந்திழுக்கும் கண்ணாலும் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறார்.
திருமணமும் தாய்மையும் பாலிவுட் நடிகைகளின் பணிவாழ்க்கையையும், வெல்ல முடியாத நட்சத்திர அந்தஸ்தையும் காலி செய்து விடுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, கஜோல் நடிக்க வரும்போதெல்லாம், அவருக்கு இது எதுவும் பொருந்தவில்லை என்று தான் தோன்றுகிறது. 44 வயதாகும் கஜோல், அதிகம் பேசும் நடிகை என்ற புகழ்பெற்றவர். சமீபத்தில் வேலையில்லா பட்டாதாரி படத்தில் வில்லியாக நடித்து இருந்தார். அப்படம் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுத் தரவில்லை. தற்போது ஈலா படத்தில் முக்கிய வேடத்திலும், ஜீரோ படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையின் ஃபீனிக்ஸ் மார்க்கெட் மாலில் கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கஜோல் சென்று இருக்கிறார். அப்போது, பாதுகாவலர் புடை சூழ வெள்ளை தேவதையாக நடந்து வந்தவர், திடீரென கால் இடறி விழுந்து உள்ளார். இருப்பினும் தரையில் முழுமையாக விழும் முன்பே கஜோலை அருகில் இருந்த காவலர்கள் பிடித்து தூக்கிவிட்டனர். இப்படி விழுந்ததுக்கு காரணம் அவர் அணிந்திருந்த பாய்ன்டட் ஹீல் காலணி தான் எனக் கூறப்படுகிறது. கஜோல் விழுந்ததை சிலர் வீடியோ எடுத்து இணையத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இது கஜோலுக்கு முதல்முறை அல்ல. இதேபோல் கடந்த 2015ம் ஆண்டில் நடந்த தில்வாலே படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த சக நடிகர் வருண் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
