Indian Bollywood actress Kajol Devgn poses during a product launch in Mumbai on November 16, 2016. / AFP / STRINGER (Photo credit should read STRINGER/AFP/Getty Images)

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

சமீபத்தில் நடிகை கஜோல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நண்பர் ஒருவரது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாட்டிறைச்சி சாப்பிட்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பதிவு வைரலாக பரவியதை தொடர்ந்து கஜோலுக்கு எதிராக பலரும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

It's a beautiful Sunday life ! ? fun and ??. @foodstories_1

A post shared by Kajol Devgan (@kajol) on

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டது தொடர்பாக அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை கஜோல் தனது தரப்பு விளக்கத்தினை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘மேஜை மீது இருக்கும் உணவு மாட்டிறைச்சி என்று தவறாக தகவல் பரவிவருகிறது. வீடியோவில் காட்டப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி. இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதாலும், மத உணர்வுகளை புண்படுத்தும் என்பதாலும், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.