தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பந்தா காட்டி, தமிழ் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டால் தான் பிழைக்க முடியும் போல… காஜல் அகர்வால் தமிழில் அறிமுகமாகி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இன்னமும் தமிழில் ஒரு சில வார்த்தைகள் கூட பேசத் தெரியாது. அதோடு யாரையும் மதிக்கவும் மாட்டார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே மதிக்காதவர் கஜால் அகர்வால்.

ஆனால் இவையெல்லாவற்றையும் மறந்து அவரிடமே ஓடுகின்றனர் பெரிய ஹீரோக்களின் இயக்குநர்கள். அஜித் நடிக்க வீரம் சிவா இயக்கும் படத்துக்கு காஜல்தான் நாயகி (காஜலுக்கு தமிழ் தெரிந்தால் என்ன.. தெரியாவிட்டால் என்ன… அதைப் பற்றியெல்லாம் கவலையே படாதவர்கள்தானே நம்ம ஹீரோக்கள்).

இப்போது விஜய் நடிக்க அட்லீ இயக்கும் படத்துக்கும் காஜல் தான் நாயகியாக பேசுகிறார்கள். இன்னொரு நாயகி நயன். தமிழை உதாசீனப்படுத்தும் காஜலுக்கே தொடர்ந்து தமிழின் பெரிய வாய்ப்புகள் போவதன் காரணம்தான் யாருக்கும் தெரியாத ரகசியம்!