விஐபி-2 படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 நாட்களில் வட சென்னை படத்தின் படிப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு, அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

மாரி  2015இல் வெளிவந்த ஓர் அதிரடி நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலாஜி  மோகன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.

மேஜிக் ப்ரேம்ஸ், உவொண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்தது. திரைப்படத்திற்கான இசையை அனிருத் இசையமைத்தார் , ஓம் பிரகாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2015 ஜூலை  17ஆம் நாள் மாரி வெளிவந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் மாரி-2 எடுக்க முடிவு செய்துள்ளார்.

தனுஷ் நடிக்கவுள்ள ‘மாரி 2’ படத்தின் நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வடசென்னை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘மாரி 2’ படப்பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

அக்டோபரில் தொடங்கும் ‘மாரி 2’ படத்தை பாலாஜி மோகன் இயக்க, தனுஷ் தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் மற்றும் வில்லனாக டோவினோ தாமஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சாய்பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

விஐபி-2 படத்தைப்போலவே ‘மாரி-2’ படத்தையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்து ஒரே நேரத்தில் வெளியிடதிட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கில் தற்போது தெரிந்த முகமாகிவிட்ட ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவியை தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் காரணம் இதுதான்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது ‘கரு’ படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் ‘மாரி-2’. ‘மாரி’ முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது ஒன்றரை கோடி சம்பளம் கேட்பதால் ஆடிப்போன தயாரிப்புகுழு அவரை தூக்கியடித்துவிட்டு அவருக்கு பதிலாக சாய்பல்லவியை கமிட் பண்ணியதாக தகவல்.

இப்படத்தின் வில்லனாக நடிப்பதற்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்திற்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.