Connect with us
Cinemapettai

Cinemapettai

kajal-murder

India | இந்தியா

19 வயது பெண்ணை நாசம் பண்ணிய கொடூரன்கள்.. மீண்டும் என்கவுண்டர் நடக்குமா?

குஜராத்தில் 19 வயது மதிக்கத்தக்க காஜல் என்ற பெண்ணை கற்பழித்து தூக்கிலிட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 1ம் தேதி காணாமல்  போனதாகவும் ஜனவரி 5ஆம் தேதி அந்தப் பெண்ணை கொன்று தூக்கிலிடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட்டு தொங்க விடப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பார்க்கும்போது நெஞ்சை பதை பதைக்கிறது.

இந்திய அளவில் உலுக்கியுள்ள இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அந்தப் பெண்ணை கடத்துவது போன்ற சிசிடிவி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் பெண்ணின்  பெற்றோர்கள் போலீசாரிடம் கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு கூட தலித் ஒரு தடையாக இருந்ததாக தெரிகிறது.

அதாவது காவல்துறையினர் அந்த பெண் காணாமல் போனதற்கு FIR கூட போடவில்லை. சமூக வலைத்தளங்களில் நடிகர் நடிகைகளுக்காக சண்டை போட்டுக்கொள்ளும் ரசிகர்கள் இது போன்ற துயர சம்பவத்தை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தால் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

இந்த ஒரு சமூக அக்கறையில் தான் இந்த செய்தியை வெளியிடுகிறோம்,  ஏற்கனவே கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி இதேபோல் கற்பழித்து  எரித்து கொல்லப்பட்டார். அதற்காக போலீசார் சில தினங்களிலேயே என்கவுண்டரில் சுட்டுக் கொண்டனர். அதேபோல் உடனடியாக போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கிராமத்து மக்கள் போராடி வருகின்றனர்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் 5ம் தேதி இறந்த பெண்ணிற்கு இன்று தான்  அந்தப் பெண்ணுக்கான நீதியைக் கேட்டு சமூக வலைத்தளத்தில் போராடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top