‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஜல் பசுபதி நடிக்கும் படத்திற்கு ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ என்று பெயர்  வைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில்   16 நாட்கள்  இருந்தார்  காஜல் பசுபதி.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் காஜல். அதன் பின்  கள்வனின் காதலி, பெருமாள், சுப்ரமணியபுரம், வேலூர் மாவட்டம், மௌன குரு, உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ளார். பல பிக் பாஸ் போட்டியாளர்கள் போல், இவருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

அதிகம் படித்தவை:  விஜய் டிவிக்கு டாட்டா சொன்ன ஜாக்குலின்.! என்ன காரணம் தெரியுமா.!

தற்பொழுது விஷாலின் இரும்பு திரை, சுந்தர் சியின்  கலகலப்பு 2 படங்களில்  நடித்து வருகின்றார்.

இதைத்தொடர்ந்து அபிலேஷ் ரவி இயக்கும் “ஒன்றா இரண்டா ஆசைகள்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஆல்யா மானசா நடிக்கும் என்னை மாற்றும் காதலே 2 நிமிட வீடியோ காட்சி.! செம்ம லவ்

இதில், யானும் தீயன் பட புகழ்   அஸ்வின் ஜெரோம் முன்னணி ரோலில் நடிக்கிறார். இவருடன் காஜல் பசுபதி  முக்கிய கேரக்டரில்  நடிக்கிறாராம் . ராஜ் கே சோழன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.