நயன், ஸ்ருதியை பாலோ செய்து காஜல் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

நயன்தாரா மற்றும் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் தயாரிப்பு பணியில் இறங்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Nayanthara

பார்க்கவே பச்ச முகம் போன்ற லுக்கில் இருப்பவர் காஜல் அகர்வால். பாலிவுட்டில் ஹோ கயா நாவில் என்ற இந்தி படம் மூலம் 2004ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, பழனி படத்தின் மூலம் தமிழிலும் கால் பதித்தார். ஆனால், இவற்றில் எந்த படமும் காஜலை நடிகையாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. 2009ஆம் ஆண்டு இவர் ராம் சரணுடன் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தை ராஜமௌலி இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து, காஜலுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் காஜல் சமீபத்தில் மெர்சல் படத்தில் விஜயுடனும், விவேகம் படத்தில் அஜித்துடனும் ஜோடி போட்டு இருந்தார். தற்போது இந்தி திரையுலகில் ஹாட் ஹிட் அடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பாரிஸ் பாரிஸ் எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில், காஜல் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் நாயகி முக்கியத்துவம் உள்ள அடுத்தடுத்த படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கோலிவுட்டின் ஸ்டார் நாயகர்கள் பலர் நடிப்புடன், தயாரிப்பிலும் இறங்கி வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது நாயகிகளும் இந்த ட்ரெண்ட்டை கடைப்பிடிக்க தொடங்கி இருக்கின்றனர். சமீபத்தில், காதலர் விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நடிகை ஸ்ருதிஹாசன் தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரித்து வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.