விரைவில் கல்யாணம்.. எனக்கு புருஷனாக வர இந்த தகுதியெல்லாம் இருக்கணும்.. காஜர் அகர்வால்

34 வயதாகும் காஜல் அகர்வால் தமிழில் விஜய் மற்றும் அஜித், தெலுங்கில் மகேஷ் பாபு உள்பட பல்வேறு டாப் நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவவர். 2008-ல் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார் . அந்த படம் பெரிதாக போகவில்லை. அதன்பிறகு காஜல் நடித்த பல படங்கள் டாப் ஹிட்.

இப்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். ‘மும்பை சாகா’ என்ற ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளார்கள். நல்ல மாப்பிள்ளையை அவர்கள் தேடிவருகிறார்கள். இது குறித்து தெலுங்கு டி.வி. நிகழ்ச்சியொன்றில் காஜலு பேசுகையில் “நான் விரைவில் கல்யாணம் செஞ்சுக்குவேன்.

எனக்கு புருஷனா வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. அதுபோல் அவருக்கும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இருக்கணும். என்னிடம் எப்போதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அக்கறையோடு என்னை கவனிச்ச வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரைத்தான் கல்யாணம் செய்வேன்” என்றார்.

Leave a Comment