சேலம் ஒபலூரில் வசிக்கும் 67 வயது மூதாட்டி சரோஜா. இவர் ரேசன் கார்டை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவதற்கு விண்ணப்பித்து அதனை கடந்த செவ்வாய் கிழமை பெற்றுக்கொண்டு வீடு வந்துள்ளார்.

ஸ்மார்ட் அட்டையில் தனது புகைப்படம் இல்லாமல் வேரோரு பெண்ணின் புகைப்படம் இருந்ததால் அதிர்ந்த பாட்டி அதனை மாற்றுவதற்கு மீண்டும் ரேசன் சென்றுள்ளார். அங்கு இருந்தவர்கள் அந்த கார்டை பார்த்து அதிர்ந்தனர். ஏனெனில் அதில் இருந்தது நடிகை காஜல் அகர்வாலின் படம்.

kajal aggarwal stillஅரசு ஊழியர்களின் மெத்தன கவனக் குறைவால் ஒரு மூதாட்டியின் படத்திற்கு பதிலாக காஜல் அகர்வால் படத்தை ஸ்மார்ட் கார்டில் பதிந்திருப்பது தெரியவந்துள்ளது
இந்த ஸ்மார்ட் அட்டை குளறுபடி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: விவேகம் படத்தை பார்த்த கையோட ஸ்மார்ட் காட்டு போட்டு கொடுத்துருப்பான் போல.