Connect with us
Cinemapettai

Cinemapettai

kajal-agarwal-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாலத்தீவில் இது இருந்தால் ஊர் சுற்றிப்பார்க்க இலவசமாம்.. ஓசியில் ஹனிமூன் கொண்டாடிய காஜல் அகர்வால்

சமீபத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தவர்தான் காஜல் அகர்வால். தன்னுடைய சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இத்தகைய முடிவை எடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் சமீபத்தில் தனது ஹனிமூனை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும்.

அதிலும் காஜல் அகர்வால் மாலத்தீவில் தி முஹாரா என்ற நட்சத்திர ஹோட்டலில் கடலுக்கடியில் இருக்கும் பெட் ரூம் வசதி கொண்ட இடத்தில் தங்கி இருந்தார். தனது கணவருடன் அடிக்கடி அந்த அறையிலிருந்து புகைப்படம் வெளியிட்டார்.

மேலும் அவர் தங்கியிருந்த அந்த பெட் ரூம் வாடகை மட்டும் சுமார் 38 லட்சம் ஆகும். மொத்தமாக காஜல் அகர்வால் ஹனிமூன் செலவு மட்டும் 50 லட்சம் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் ஹனி மூன் கொண்டாடுவதற்கு பத்து பைசா கூட செலவு செய்ய வில்லையாம்.

அதற்கு காரணம் அவரது இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் தான். இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கும் காஜல் அகர்வாலை அந்த ஓட்டல் நிறுவனம், இங்கு இருக்கும்வரை தங்களுடைய ஹோட்டலை உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலப்படுத்தினால் போதும் எனக் கூறி விட்டார்களாம்.

kajal-agarwal-cinemapettai

kajal-agarwal-cinemapettai

மேலும் 2 மில்லியன் பாலோயர்கள், 4 மில்லியன் பாலோயர்கள் என தனித்தனியாக ஆஃபர் கொடுத்து வருகிறார்களாம். இந்தியாவில் மாலத்தீவை அதிக அளவில் விளம்பரப்படுத்துவதற்காக பிரபலங்களுக்கு இப்படி ஆஃபர் வழங்கி வருகிறார்களாம்.

இதனால்தான் கடந்த மாதம் மட்டும் தென்னிந்திய சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர் நடிகைகள் மாலத்தீவில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top