Tamil Cinema News | சினிமா செய்திகள்
லிப் டூ லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.. சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது!
காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த 30ம் தேதி ஸ்டார் ஹோட்டலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த உடன் காஜல் தன் கணவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்பதால் காஜல், கவுதம் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க முடியவில்லை. இருவீட்டார், நெருங்கிய நண்பர்கள் என்று சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த மறுநாள் காலை புதுமனை புகுவிழா நடந்தது. இந்நிலையில் காஜல் திருமதி கிட்ச்லுவாக எழுந்தபோது என்று கூறி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் கவுதம்.
காஜலின் புகைப்படத்தை பார்த்தவர்கள் மேக்கப் இல்லாவிட்டாலும் புதுப்பெண் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என்று கமெண்ட் செய்துள்ளனர். தற்போது லிப் கிஸ் அடிக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார்.
காஜல் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kajal-husband-kiss
