fbpx
Connect with us

Cinemapettai

காஜல் அகர்வாலின் அந்த இடத்தை தொட்ட சர்ச்சை படம்.. OTT-யில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலின் அந்த இடத்தை தொட்ட சர்ச்சை படம்.. OTT-யில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குயின். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.

தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பரூல் யாதவ் ஆகியோர் நடித்து வந்தனர். இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சம்மர் ரிலீசுக்கு தயாராக காத்து கொண்டு இருந்தன.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தை கமலின் நெருங்கிய நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமலஹாசனின் பஞ்சதந்திரம், சதிலீலாவதி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டீஸரில் காஜல் அகர்வாலை அவரது தோழியாக நடித்து இருக்கும் பெண்ணொருவர் காஜல் அகர்வாலின் முன்னழகை தொடும்படி காட்சிகள் அமைந்திருந்தது. இது பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பியது.

இது ஒருபுறமிருக்க இந்த படத்தை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். சம்மர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு வழியில்லாமல் ஆகிவிட்டது.

இதனால் உடனடியாக படத்தின் எதிர்பார்ப்பு குறைவதற்குள்ளாகவே OTT தளத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. அனேகமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top