kajal aggarwal still
kajal-aggarwal

காஜல் அகர்வால் தன் திரை வாழ்வில் முக்கிய முடிவை எடுத்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி நாயகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் படங்களில் நடிகையாக நடித்தவர் காஜல் அகர்வால். தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்து இருந்தார். அதிலும், இளம் நடிகர்களுடன் எல்லாம் நடிக்க மாட்டேன் என தனி ரூல்ஸ் போட்டே படங்களில் கமிட்டாகி வந்தார். நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது அவரின் திரை வாழ்வு. ஆனால் தற்போது காஜலின் கைவசம் புதுப்பட வாய்ப்பே இல்லையாம். பல மொழிகளில் ஒரு சேர உருவாகும் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் மட்டும் நடித்து வருகிறார். பாரிஸ் பாரிஸ் எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை. இதுவே காஜலை பெரும் வருத்ததில் ஆழ்த்து இருக்கிறதாம்.

இதனால், காஜல் ஒரு பெரும் முடிவை எடுத்திருக்கிறார். இனி சீனியர் நடிகர்களுடன் மட்டுமல்லாமல் ஜூனியர் நடிகர்களுடனுன் நடிக்கலாம் என முடிவு செய்து இருக்கிறார். அதுப்போல தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கவும் தயாராகி விட்டதாக தெரிகிறது. இதனால், தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஓகே ஆகும் பட்சத்தில் காஜல் தனது ரீ எண்ட்ரியை பலமாக தொடக்கலாம் என பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

kajal
kajal

இதே போல, நடிகை நயன்தாரா சந்திரமுகி படத்தில் அறிமுகமாகி சில படத்தில் நடித்தவர் சிம்புவுடனான காதலால் சினிமா உலகில் இருந்து விலகி இருந்தார். அதை தொடர்ந்து, சிவாஜி படத்தின் ஒற்றை பாடலுக்கு எண்ட்ரி ஆனவரின் க்ராப் இன்று ஏகபோகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. என்னத்தான் அவரை தமிழ் உலகின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்தாலும் சீனியர் நடிகர்களுடன் மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் போன்று வளரும் நாயகர்களுடனும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தனக்கு முக்கியத்துவம் உள்ள இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா போன்ற படங்களிலும் தனது நடிப்பை நிரூபித்து வருகிறார். இதனால், நயனை இன்ஸ்ப்ரேஷனாக எடுத்து கொண்ட காஜல், அவரை பின்பற்ற முடிவு செய்து தான் இந்த மாற்றத்தை செய்து இருப்பதாக தெரிகிறது.